வடக்கு, கிழக்கு மீனவர்கள் இன்றும் நாளையும் மீன்பிடித்தல் மற்றும் கடற்செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காளவிரிகுடாவில் காங்கேசன்துறையிலிருந்து 600 கிலோ மீற்றர் தூரத்தில் தற்போது “வர்தா’ புயல் மையம் கொண்டிருக்கின்றது.
குறித்த “வர்தா’ புயல் 200, 300 மீற்றர் மையத்திற்கு வரும் போது 100 கிலோமீற்றர் வேகம் கொண்ட பலமான காற்று, பலத்த மழை, அதிகூடிய கடல்கொந்தளிப்பு காணப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே இன்றும், நாளையும் வடக்கு, கிழக்கு மீனவர்கள் மீன்பிடிநடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
வடமேற்கில் மையம் கொண்டிருக்கின்ற “வர்தா’ புயல்நாளை பிற்பகல் சென்னையைக் குறிக்கிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது