தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் நாளையதினம் இலங்கைக்கு விஐயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கு விஐயம் செய்யும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் எதிர்வரும் புதன்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார்.இவருக்கான உத்தியோகபூர்வமான வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தஜிகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளார்.அன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரை தஜிகிஸ்தான் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
14ஆம் திகதி கண்டிக்குச் செல்லும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி, சிறீ தலதா மாளிகைக்கு சென்ற பின்னர் தொல்பொருள் நிலையத்தையும் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் மாலை இவர் கொழும்பில் வர்த்தக சமூகத்தினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.