யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.இந்தியத்துணைத்தூதரகம் மற்றும் அமுதசுரபி கலாமன்றத்தினரின் ஏற்பாட்டில் பாரதியாரின் நினைவுதினம் யாழ்ப்பாணம் துர்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.இதன் முன்னோடியாக யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியிலுள்ள பாரதியாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
மலர்மாலையை வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் யாழ்ப்பாண இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் சின்னத்துரை தவராஜா, அமுத சுரபி கலாமன்றத்தின் அமைப்பாளர், போராசிரியர் தி.வேல்நம்பி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் அணிவித்தனர்.நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு யாழ்ப்பாண இந்தியத்துணைத்தூதரகத்தினால் பாரதியின் நினைவாக கமுகு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.