நுவரெலியாவில் தமிழ் வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா (காணொளி)

393 0

hatton-school-building நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்திற்கான ஐந்து வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி. என்.இராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

குறித்த பாடசாலை கட்டிடம் கடந்த காலங்களில் எவ்வித அபிவிருத்தியும் இல்லாமல் மாணவர்கள் கற்பதற்கான பௌதீக வளங்கள் அற்ற நிலையில் இயங்கி வந்துள்ளது. இப்பாடசாலையில் தோட்டப்புற மணாவர்களே கல்வி கற்று வருகின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

இதனையடுத்து இப்பிரச்சினையை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மத்திய மாகாண அமைச்சர் ரமேஷ்வரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து 52 இலட்சம் ரூபா செலவில் இந்த பாடசாலைக்கான புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மத்திய மாகாண விவசாயம், தோட்ட உட்கட்டமைப்பு மீன்பிடி, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரனினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல், கணபதி கனகராஜ், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.