தற்போது உள்நாட்டு சந்தையில் நாட்டு அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் அனைத்து அரிசி வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தம்புள்ளை சந்தையில் அரிசி விலை தொடர்பில் தேடிப் பார்த்த போது கடைக்கு கடை விலை வித்தியாசப்படுகிறது.
பெரிய அளவிலான ஆலைகளினால் மாத்திரம் வரையறுக்கப்பட்ட அளவு அரிசி விநியோகிக்கப்படுவதாகவும், சிறிய ஆலைகளில் அரிசி இல்லை என்றும் தேவையான அளவை விட குறைந்த அளவே வழங்குவதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
88 ரூபாவில் இருந்து 95 ரூபா வரையான விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதுடன், கிராமப்புறங்களில் அரிசி ஒரு கிலோ 100 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. அரிசியின் விலையை தாங்கிக் கொள்ள முடியாதுள்ளதாக நுகர்வோரான மக்கள் தெரிவிக்கின்றனர். அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாயின் அவற்றை வெளியில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சிறிய வர்த்கர்கள் தெரிவிக்கின்றனர்.