ஹிலரி மீது குற்றச்சாட்டுகள் இல்லை

516 0

hilaryஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாக கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டனுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப் போவதில்லை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பதான எப்.பி.ஐ. அறிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் ஜேம்ஸ் கோமேய் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் ராஜாங்க செயலாளராக இருந்த காலப்பகுதியில் உத்தியோகபூர்வ மின்னஞ்சலை தனிப்பட்ட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது சர்ச்சைக்குரிய விடயமாக நிலவியது.

எனினும் அவர் மிகவும் கவனயீனமாக இந்த விடயத்தில் செயற்பட்டுள்ளமை புலனாகி இருப்பதாகஇ ஜேம்ஸ் கோமேய் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதி;லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்இ எப்.பி.ஐ.யின் இந்த தீர்மானத்துக்கு குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a comment