அரச காணி நிலத்தை தோண்டிய 3 இளைஞர்கள் கைது

272 0

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கரைக்காடு பிரதேசத்தில் அரச காணியில் அத்துமீறி சட்டவிரோதமாக நிலத்தை பக்கோ இயந்திரம் மூலம் தோண்டிய சூரியவல பகுதியைச் சோந்த 3 இளைஞர்களை நேற்று (17) மாலை கைது செய்ததாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிசார் குறித்த பகுதிக்கு சென்று அங்கு சட்டவிரோமாக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த 3 சூரியவல பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை நிலத்தை தோண்டி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்ததுடன் இதற்கு பயன்படுத்திய பக்கோ இயந்திரம், பிக்கப் ரவ வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களை இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.