இந்தியாவின் இலங்கைக்கான கண்டி புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கைகான இந்திய உதவி தூதுவர் ராக்கேஸ் நடராஜ் இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் குறைநிறைகளை ஆராய்வதற்காக நேற்று (17) திகதி டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
சுமார் 152 வரலாற்றினை கொண்ட குறித்த வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 2011 ஆண்டு 150 கட்டில்களைக்கொண்ட மூன்று மாடி புதியக்கட்டடம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆண்டு நிறைவு செய்தது.
குறித்த வைத்தியசாலையில் ஆறு சத்திரசிகச்சைகள் ஒரு அவசரசிகிச்சைப்பிரிவு அதிநவீன சமையலறை கழிவறை உட்பட வைத்தியர் விடுதிகள் ஆகியன கொண்டு அமைக்கப்பட்ட குறித்த வைத்தியசாலையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2017 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு இந்திய அரசாங்கத்தினால் நிர்மானிக்கப்பட்ட இந்த புதிய வைத்தியசாலையில் கடந்த காலங்களில் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டன.
நவீன முறையில் அமைக்கப்பட்ட கழிவறை சுத்திகரிப்பு பிரிவு பழுதடைந்தமையினால் அதில் வெளியேறும் கழிவு நீர் பிரதேசம் முழவதும் துர்நாற்ம் வீசியது.,
இதனால் சிகச்சைக்கு வருபவர்களும் வைத்தியர்கள் ஊழியர்கள் பிரதேச வாசிகள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இதனை புனரமைப்பதற்கு சுகாதர பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அது கைக்கூடவில்லை இது போன்று இன்னம் சில குறைபாடுகளும் காணப்பட்டன.
இது குறித்து இந்திய உதவி தூதரகத்திற்கும் அறிவிக்கப்;பட்டிருந்தமையினாலும் அவர் இது குறித்த ஆராய்ந்து பார்ப்பதற்காகவே நேற்று (17) வருகை தந்திருந்தார்.
இதன் போது குறைபாடுகள் குறித்தும் வைத்தியசாலையில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் உடனடியாக விளக்கமான அறிக்கை ஒன்றினை தனக்கு சமர்ப்பிக்குமாறும் அது குறித்து இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கத்திடமும் பேசி இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் இதன் போது தெரிவித்தார்.
வைத்தியசாலையின் கடமை வைத்திய பணிப்பாளர் அருள்குமார் உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இந்த கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதுடன் பதவியேற்று எட்டு தினங்களிலேயே இந்த வைத்தியசாலையின் குறை நிறைகளை ஆராய இவர் விஜயம் செய்திருப்பதனால் மிக விரைவில் பிரிச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என நம்புவதாக இதன் போது வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்தன.