சிவனொளிபாதமலை யாத்திரை – 13ஆம் திகதி ஆரம்பம்

314 0

sripadaசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் எதிர்வரும் 13ஆம் திகதி பௌணமி தினத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரதம், 12ஆம் திகதி அன்று பவனியாக பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தினை வந்தடையும்.

இந்த முறையும் 3 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணிக்கவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரதிஷ்டை செய்ததன் பின்னர் 13ஆம் திகதி அதிகாலை நடைபெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனிடையே, சிவனொலிபாதமலை பருவகால யாத்திரை காலப்பகுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நுவரெலியா மாவட்ட செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், யாத்திரிகர்களுக்கு மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,

யாத்திரிகர்களுக்காக விசேட போக்குவரத்துச் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.