றம்புக்கனை – நெட்டியாபான பிரசேத்தில் மாஓயவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
இவர் மேலும் நான்கு பேருடன் நேற்று மதியம் நீராடச் சென்றுள்ள நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
சடலம் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நீரிழ் மூழ்கி பலியானவர் 38 வயதுடையவர் என்றும் அவர் றம்புக்கனை – பத்தன்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, களுத்துரை – வஸ்கடுவ கடலில் நீராடச் சென்ற 76 வயதான ஜெர்மன் நாட்டு பிரஜை ஒருவர் நேற்று நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
இதனிடையே, கலஹா புப்புரஸ்ச லெவலன் தோட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியாகினார்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.