10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்- அமைச்சர் பேட்டி

286 0

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்சார பஸ் போக்குவரத்து திட்டம் எந்த வகையிலும் கைவிடப்படாது. கொரோனா காலத்தில் கடந்த மாதங்களில் அதற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ‘பார்ம்-2’ என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதில் மின்சார பஸ்களுக்கு மானியம் கொடுத்தார்கள். இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நாட்டிலேயே முதல் முறையாக சி40 என்ற ஒப்பந்தத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். அதன்படி ஜெர்மன் ‘கே.எப்.டபுள்யூ.’ வங்கியில் இருந்து கடன் உதவி பெற்று மின்சார பஸ் போக்குவரத்தும், பி.எஸ்.-6 ரக பஸ்களுக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை மற்றும் பழைய பஸ் பாஸ் வைத்திருந்தால் போதும். அவர்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.