நீர் குழாயில் வெடிப்பு – நீர்விநியோகம் பாதிப்பு

273 0

images-1அவிஸாவாளை – கொழும்பு பழைய வீதியில் கடுவளை – ஹேவாகம பிரதேசத்தில் நீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடுவளை பிரதேசத்தின் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ஹம்பத்தளையில் இருந்து கொழும்புக்கு நீரை கொண்டுச் செல்லும் நீர் குழாயிலேயே இவ்வாறு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருத்தபணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீர் குழாய் வெடிப்பு காரணமாக கடுவளை – ஹேவாகம பிரதேசத்தின் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நிர்விநியோகத்திற்கும் தடையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.