துருக்கி: கால்பந்து திடல் அருகே தீவிரவாத தாக்குதலுக்கு 29 பேர் பலி

280 0

201612110823552403_bombs-outside-istanbul-soccer-stadium-kill-29_secvpfதுருக்கி நாட்டின் பழமைவாய்ந்த நகரமான இஸ்தான்புல்லில் உள்ள கால்பந்து திடல் அருகே நடத்தப்பட்ட கார்குண்டு மற்றும் மனிதகுண்டு தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.

இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் உள்ள கால்பந்து திடல் அருகே இன்று முதலில் ஒரு கார்குண்டு வெடித்து, சிதறியது. அடுத்த 45 வினாடிகளில் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருந்த ஒரு தீவிரவாதி வெடித்து சிதறினான்.

இந்த தாக்குதல்களில் மொத்தம் 29 பேர் பலியானதாகவும், 116 பேர் காயமடைந்ததாகவும் துருக்கி நாட்டு உள்துறை மந்திரி சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார். காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.