தொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உள்நாட்டு உதவியாளர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாட்டிற்குள் பிரவேசிக்க குவைத் அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக குவைத் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமது நாட்டிற்கு வரும் வீட்டுத் தொழிலாளர்கள் தங்கள் நாடுகளால் அங்கீகாரம் பெற்ற ஒரு ஆய்வகத்திலிருந்து ஒரு ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்துக்கு வரும் பயணிகள் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சோதனைகளின் முடிவுகள் எதிர்மறையாக இருந்தால், சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக நேரடியாக நியமிக்கப்பட்ட இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 நாட்கள் தனிமைப்படுத்தலின் முடிவில் தொழிலாளர்கள் மூன்றாவது பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அதன்பின்னர் முடிவுகள் எதிர்மறையாக இருந்தால் அவர்களின் ஆதரவாளர்களின் வீடுகளுக்குச் செல்லலாம். என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், நேர்மறையான முடிவுகளைப் பெறுபவர்களைப் ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மாற்றுவதற்கு சுகாதார அமைச்சகம் பொறுப்பேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.