46 வது ஐ.நா பேரவை அமர்வில் தீர்க்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் கூட்டாக தமிழ் கட்சிகள் கடிதம் .

517 0
தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் சிவில் சமூக அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைத்து
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) 46 வது அமர்வுக்கு    இம்முறை  தமிழர்களுக்கு தீர்க்கமான  தீர்வு  எட்டப்பட வேண்டும்  என்று கூட்டாக கடிதம் எழுதியுள்ளார்கள்.

15 சனவரி 2021
தூதுக்குழு தலைவர்கள்
ஐநா மனித உரிமை கவுன்சிலின் 47 அங்கத்துவ நாடுகளின் தூதுக்குழுக்கள்

பெருமதிப்பிற்கு உரியவர்களே

46வது ஐநா மனித உரிமை கவுன்சில் அமர்வில் தீர்க்கமான முடிவுகளுக்கான அழைப்பு

சிறிலங்கா மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படவிருக்கும் 46வது மனத உரிமை கவுன்சிலின் அமர்வை நோக்கி, தேர்தல்களில் தெரிவுசெய்யப்பட்ட சிறிலங்கா தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குழுமங்கள் மற்றும் தமிழ் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து இக்கடிதத்தை எழுதுகிறோம்.

சிறிலங்காவில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஒரு கிழமைக்குள், ஐநா செயலாளர் நாயகம் மே 23ம் திகதி அங்கு சென்று திரும்பியவுடன், சிறிலங்கா அரசும் ஐநா அமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டதை இங்கு கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.:

“மனித உரிமைகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும், சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு அதை உயர்த்தவும் சிறிலங்காவிற்குள்ள கடப்பாட்டிற்கு சிறிலங்கா மதிப்பளித்து நடக்கும். சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதற்கான ஒரு விசாரணையை நடத்துவதன் முக்கியத்துவத்தை ஐநா செயலாளர் நாயகம் வலியுறுத்தினார். சிறிலங்கா அரசு பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தை துடைக்கும் நடவடிக்கைகளை எடுக்கும்.”

மேற்கூறப்பட்ட கடப்பாடுகளுக்கு அமைய சிறிலங்கா எதுவித செயற்பாடுகளும் எடுக்காததால், ஆயுதப்போராட்டத்தின் இறுதி கட்டத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் விசரணைகள் பற்றி ஆராய, ஐநா செயலாளர் நாயகம் 2010 யூன் 22ம் திகதி ஒரு மூவர் குழுவை அமைத்தார். இம்மூவர் குழுவின் அறிக்கை 2011இல் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து செயலாளர் நாயகம் அதை ஐநா மனித உரிமை கவுன்சிலின் தலைவருக்கும் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் 2011 செப்படம்பரில் சமர்ப்பித்தார்.

பின்னர் 2012 மார்ச்சில் ஐநா மனித உரிமை கவுன்சில் ”சிறிலங்காவில் பொறுப்பு கூறலும் இணக்கப்பாடு கொண்டு வருதலும்” என்ற 19/2 தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ந்தும் அது மார்ச் 2013 இலும் மார்ச் 2014 இலும் பல தீர்மானங்களை நிறைவேற்றியது. மேலும் தொடர்ந்து சிறிலங்கா அரசுடன் இணைந்து, 2015 அக்டோபரில் தீர்மானம் 30/1 ம், 2017 மார்ச்சில் தீர்மானம் 34/1 ம், 2019 மார்ச்சில் தீர்மானம் 40/1 நிறைவேற்றியது.

சிறிலாங்காவின் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் யாவரும் சிறிலங்கா பாதுகாப்புதுறையினரை தாம் தண்டனையிலிருந்து பாதுகாப்போம் என்று திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார்கள். சிறிலங்கா நேர்மையாக பொறுப்பு கூறலுக்கான உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்தும் சாத்தியம் இல்லை என்பதை அங்கத்துவ நாடுகள்ன இனியாகிலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் மோசமாகி வருகிறது. இராணுவமயமாக்கல், அரசியல் கைதிகளை முடிவற்று தடுத்து வைத்திருத்தல், தொல்லியல் ஆய்வு என்ற சாக்கில் நில அபகரிப்பு, கால்நடைகள் மேய்வதற்கான நிலத்தின் மேல் தமிழருக்கு உள்ள கூட்டு உரிமையை பறித்தல், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களை தீவிரமாக கண்காணித்தல், கோவிட்19 காலத்தில் இறந்த உடல்களை புதைப்பதற்கான இஸ்லாமிய சகோதரர்களின் உரிமை மறுக்கப்படுதல், நினைவு கொள்ளும் உரிமையை மறுத்தல் போன்றவை மோசமாகி வரும் நிலமையை மேலும் தாமதமின்றி சீர்செய்யவேண்டி தேவையை கோடிட்டு காட்டுகின்றன.

மனித உரிமை கவுன்சில் பெப்பிரவரி-மார்ச் 2021 அமர்வு, தீர்மானம் 40/1 ற்கான சிறிலங்காவின் கடமை உணர்வை கணித்து மேற்கொண்டு எடுக்க வேண்டிய செயல் திட்டத்தை வரைய இருக்கிறது. அப்போது அதன் அங்கத்துவ நாடுகள் ஒரு தீர்க்கமான முடிவை கொண்டுள்ள ஒரு இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று நாங்கள் உங்களை தூண்டுகிறோம். இனவழிப்பு, மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உட்பட ஆயுத போராட்டத்தின் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிக்க சிறிலங்கா தவறிவிட்டது என்பதை இத்தீர்மானம் உறுதியாக அறிவிக்க வேண்டும். இந்நிலையில் இத்தீர்மானமானது உள்நாட்டு அல்லது உள்நாடு-வெளிநாடு இணைந்த ஒரு அமைப்பு இவ்விசாரணையை மேற்கொள்ளும் சாத்தியங்கள் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

நாம் வேண்டுவது:
இப்புதிய தீர்மானத்தில், ஐநா பாதுகாப்பு சபை மற்றும் ஐநா பொதுச்சபை உட்பட ஏனைய ஐநா அமைப்புக்கள் இவ்விடயத்தை கையில் எடுத்து இதை மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் மன்றிற்கோ அல்லது வேறு பொருத்தமான சர்வதேச அணுகுமுறைகளிடமோ கையளித்து, இனவழிப்பு, மனித நேயத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள அங்கத்துவ நாடுகள் கேட்க வேண்டும்.

மேலே சொல்லப்பட்டது போல, மனித உரிமை கவுன்சிலின் தலைவர் சிறிலங்காவில் பொறுப்பு கூறல் என்ற விடயத்தை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு திரும்பவும் ஐநா பாதுகாப்பு சபையிடம் கையளிக்க வேண்டும்.

மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து கண்காணிக்கவும் அதற்காக சிறிலங்காவில் களத்தில் நின்று கண்காணிக்கவும் ஆவன செய்யும்படியும் அங்கத்துவ நாடுகள் கேட்க வேண்டும்.

மேலே முதலாம் நம்பரில் சொன்னதை மறுக்காமல், அதே நேரம் சிரியாவுக்காக ஐநா பொது சபையின் கீழ் அமைத்தது போன்ற ஒரு சுதந்திரமான விசாரணைக்கும் சாட்சிகள் சேகரிக்கவும் இரண்டு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்ட தீர்க்கமான ஒரு முறையை உருவாக்க வேண்டும்.

நடந்தவற்றிற்கு பொறுப்பு கூறலுக்கான ஒரு திடமான செயற்திட்டமும் அதற்காக இதை மேற்தளத்தில் உள்ள அமைப்புகளிடம் உயர்த்தவும் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

ஆக, அங்கத்துவ நாடுகள் உறுதியான கால தாமதமற்ற நடவடிக்கையின மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை கொடுக்கப்படாத நீதியை பெற்றுத்தர வேண்டும்.

கையொப்பமிட்டோர்
1. மதிப்பிற்குரிய இரா சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்
2. மதிப்பிற்குரிய ஜி ஜி பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர், Leader – Tamil National People’s Front
3. மதிப்பிற்குரிய நீதிபதி விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்,
Leader – Tamil Makkal Tesiya Kootani
4. Rev.Fr. Leo Amstrong
Tamil Heritage Forum, Mullaitivu
5. Mr. Sabharathinam Sivayohanathan
Eastern Province Civil Society Forum
6. Mr. Rasalingham Vikneswaran
President – Amparai Civil Society forum
7. Mr. Amarasingham Gajenthiran
General secretary – Tamil Civil Society Forum (TCSF)
8. Ms. Yogarasa Kanagaranjini
President – Association for Relatives of the Enforced Disappearances, North and East.
9. Mr. Subramanium Sivaharan
President – Tamil Thesiya Vaalvurimai Iyakkam (TTVI)
10. Velan Swamikal
Sivaguru Aatheenam
11. Rt. Rev. Dr. C. Noel Emmanuel
Bishop of Trincomalee