கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் இடைவிலகும் நிலைமை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில், மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும், காவற்துறையினரும் இணைந்து விசேட வேலைத்திட்டங்களை அமுலாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஆகியோரின் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன்அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள சாந்தபுரம் மற்றும் அம்பாள்நகர் ஆகிய பகுதிகளில் பாடசாலை செல்லாத 3 பெண் சிறுமிகள் உட்பட 16 சிறார்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களில் சிலரை சிறுவர் இல்லங்களில் இணைக்குமாறும், ஏனையோரை அச்சுவேலியில் சான்றுபெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சேர்க்குமாறும் உத்தரவிடப்பட்டது.
கைதான மூன்று பெண் சிறுமிகள் எச்சரிக்கப்பட்டு பெற்றாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.