சுகாதார நடைமுறைகளைச் செயற்படுத்த பொலிஸாரால் அநேக நடவடிக்கைகள் முன்னெடுப்பு: அஜித் ரோகண

216 0

மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி பேணாத 137 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு பயணிக்கும் பயணிகள், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோர் மற்றும் பாடசாலை வாகனச் சாரதிகள், உதவியாளர்கள் எனப் பலர் மீது பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக் கப்பட்டன.

இதன்படி மேற்கொள்ளப்பட்ட விரைவான அன்டிஜென் சோதனையில் பலர் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டனர்.

இதேவேளை பொது நிறுவனங்களில் சுகாதார நடைமுறைகள் முறையாக செய்யப்படுகின்றனவா என அறிய மற்றொரு சிறப்பு பொலிஸ் குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்படி 2823 இடங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அதில் 473 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.