அமெரிக்காவின் இந்தோ பசுபிக் குறித்த மூலோபாயத்தில் இலங்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்ன?

246 0

அமெரிக்காவின் இந்தோ பசுபிக்கிற்கான மூலோபாயங்களில் இலங்கையும் இடம்பெற்றிருப்பது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஆவணமொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தோ பசுபிக்கிற்கான அமெரிக்காவின் மூலோபாயங்கள் குறித்த ஆவணத்தை வெள்ளை மாளிகை பகிரங்கப்படுத்தியுள்ளது.

இலங்கை உட்பட பிராந்தியத்தில் உருவாகிவரும் சகாக்களின் சுதந்திரமான திறந்த ஒழுங்கமைப்பிற்கான பலத்தை அமெரிக்கா அதிகரிக்கவேண்டும் என அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஆவணம் இந்தோபசுபிக்கில் சீனாவின் செல்வாக்கு குறித்தும் அதனை எதிர்கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் கவனம் செலுத்தும் விதததில் அமைந்துள்ளது.

சீனாவின் கைத்தொழில்கொள்கைகளும் நியாயமற்ற வர்த்தக கொள்கைகளும் சர்வதேச சந்தையையும் உலக போட்டித்தன்மையையும் பாதிப்பது குறித்து அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது இராணுவமற்றும் மூலோபாய நோக்கங்களை அடைவதை தவிர்ப்பதற்காக அமெரிக்கா தனது சகாக்கள் மற்றும் தன்னை போன்ற கொள்கை உடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் தந்திரோபாயம் குறித்து அமெரிக்க ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அவுஸ்திரேலியா ஜப்பான் அமெரிக்காவை உள்ளடக்கிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.