இயற்கையோடு நெருக்கமாக தை பொங்கலைக் கொண்டாடுவோம் – சஜித்!

278 0

இயற்கையோடு நெருக்கமாக தை பொங்கலைக் கொண்டாடுவோம் என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் திரு விழாவான தைபொங்கல் விழாவிற்கு வாழ்த்துக்கள்.

“அறுவடை விழா” என்று அர்த்தப்படும் தைபோங்கல் உற்சவம். இது மனிதகுலம், விலங்குகள் மற்றும் இயற்கையிடம் கருணை காட்டும் உன்னத நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தை பொங்கல் திருவிழா பொது நட்பின் உச்சமாகவும், பரஸ்பர புரிந்துணர்வின் வெளிப்பாடாகவும் தை பொங்கல் காணப்படுகிறது.

2000 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த திருவிழா, அவர்களின் கலாச்சார அடையாளத்தை மதிக்கிறது மற்றும் மனிதனுக்கும் இயற்கையுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை அடையாளப்படுத்துவதாக அமைகிறது, மக்களிடையே ஒற்றுமை மற்றும் சமூகத்தின் உணர்வை புதுப்பிப்பதோடு மற்றும் எதிர்கால வெற்றிக்கான ஆசீர்வாதங்களை எதிர்பார்பதாக அமைந்து காணப்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் இயற்கையை எதிர்த்துப் போவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை அனுபவித்து வருகிறது. மனிதரே பல உலக பேரழிவுகளுக்கு கதவைத் திறந்துள்ளார்.

இயற்கையோடு மேலும் மேலும் நெருக்கம் தேவைப்படுவதை தீவிரமாக உணரும் ஒரு நேரத்தில், இயற்கையுடன் தொடர்புடைய தை பொங்கல் போன்ற கலாச்சார விழாக்கள் அவசியமாக அதிக அர்த்தத்தை சேர்க்கின்றன.

உலகத்திற்கு தேவைப்படுவது நல்லிணக்கம்.இதற்கான மனித குலத்தின் பொறுப்பு மகத்தானது. அதற்கு தை பொங்கல் திருவிழாவும் ஒரு பாலமாக அமைக்கப்பட்டால், உலகம் இன்னும் அழகாக இருக்கும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.