வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்கள் அன்றி, பிரசன்னமில்லாதோர்’ என்ற சான்றிதழை வழங்குவதற்கான சட்ட மூலம் நேற்று இலலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் இந்த சட்ட மூலம் முன்வைக்கப்பட்டது.
அதேநேரம், ஹோமியோபதி மருத்து சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்றுநாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது ஹோமியபதி மருத்துவ முறைமையை வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த கோரிக்கையை நேற்றைய தினம் நாடாளுமன்றில் விடுத்துள்ளார்.
இதற்கிடையில், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகள் மீதும் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்
இதேவேளை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தின் பொறுப்பில் உள்ள பாடசாலைகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.