கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
முனையத்தை விற்க முன்னைய அரசாங்கம் ஓர் உடன்படிக்கை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டினுள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் போது நாட்டின் இறையாண்மைக்கு அல்லது சுயாதீனத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படுவதாக குற்றம் சாட்டி வர்த்தக சங்கத்தினர் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.