இலங்கைக்கு இந்தியா உதவி

478 0

485743454flagஇலங்கையில் தொடருந்து சேவையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்கவுள்ளது.

இது தொடர்பில் இலங்கையின் வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும், இந்திய தொடருந் சேவைகள் ராஜாங்க அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா இலங்கையில் பல்வேறு தொடருந்து பாதைகளை அமைத்திருப்பதுடன், பாதை செப்பனிடல் பணிகளுக்கும் உதவியளித்துள்ளது.

இந்த நிலையில் தொடருந்து சமிக்ஞை மேம்படுத்தல் மற்றும் தொடர்பாடல்முறைமையை அவிவிருத்தி செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இந்தியா உதவிகளை வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment