முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1415 பேர் சட்டரீதியாக விலகல்

519 0

sssssssssssss1முப்படையில் இருந்து சட்டவிரோதமாக தப்பியோடிய 1415 பேர் சட்டரீதியாக சேவையில் இருந்து விலகியுள்ளதாக இலங்கையின் இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் இராணுவத்தைச் சேர்ந்த 1185 பேர், கடற்படையைச் சேர்ந்த 161 பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 69 பேர் இவ்வாறு சேவைகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர பொதுமன்னிப்புக்கோரி இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற 1492 பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இதில் 307 விண்ணப்பங்களில் குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் மீதமுள்ளவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

முப்படையினருக்கான பொதுமன்னிப்புக்காலம் இம்மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.