போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப் போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது.
சர்வதேசத்திற்கு முன்பாக பொறுப்புடமையின் உறுதிமொழிகளை கூறி விட்டு உள்நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தினார்.
போர் விதவைகள் நீதிக்காக காத்திருக்கின்றனர். உறவுகளை தொலைத்து விட்டு அவர்களை தேடி தினந்தோறும் போராடுகின்றனர்.
மேலும் பலர் இராணுவத்திடமிருந்து தமது காணிகளை பெற்றுக் கொள்ள போராடுகின்றனர்.
ஆனால் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை புறம்தள்ளி விட்டு தேசிய நல்லிணக்கத்தை அடைய முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று இடம்பெறுகின்ற நிலையில் அது குறித்து தெளிவுபடுத்துகையிலேயே வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு