இலங்கையில் உரிமைகளை பாதுகாப்பதற்கும் பொறுப்புக்கூறலை சாத்தியமாக்குவதற்கும் திறனற்ற பலவீனமான சாதனம் ஐநா மனித உரிமை பேரவை என்பது நிருபணமாகியுள்ளது. என சர்வதேச நெருக்கடி குழுவின் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான வலுவான செய்தியை உறுப்புநாடுகள் தெரிவிப்பதற்கான வாய்ப்பை எதிர்வரும் அமர்வு வழங்குகின்றது என அலன் கீனன் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவுகளில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தனது டுவிட்டர் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கையில் உரிமைகளை பாதுகாப்பதற்கும் பொறுப்புக்கூறலை சாத்தியமாக்குவதற்கும் திறனற்ற பலவீனமான சாதனம் ஐநா மனித உரிமை பேரவை என்பது நிருபணமாகியுள்ளது.
எனினும் இலங்கையை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான வலுவான செய்தியை உறுப்புநாடுகள் தெரிவிப்பதற்கான வாய்ப்பை எதிர்வரும் அமர்வு வழங்குகின்றது.
இதற்கு மேலதிகமாக இலங்கையின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிப்பதற்கான வலுவான ரேரணையொன்றுடன் சர்வதேச நியாயாதிக்கம் குறித்து சிந்திக்குமாறு உறுப்புநாடுகள் வலியுறுத்தப்படவேண்டும்.மேலும் இலங்கை தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் ஆபத்தான போக்கிலிருந்து நாட்டை மீட்குமாறு ஏனைய அனைத்து சர்வதேச செல்வாக்குகளும் செலுத்தப்படவேண்டும்.
இலங்கையின் இனக்கலவரங்கள் அரச மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அட்டுழியங்கள் அநீதிகள் தமிழர்களிற்கு எதிரான கலவரங்கள் ஜேவிபிகிளர்ச்சி விடுதலைப்புலிகளினதும் தமிழர்களினதும் ஆயுதப்போராட்டம்,முஸ்லீம்களிற்கு எதிரான கலவரங்கள் ஐஎஸ் அமைப்பினால் உந்தப்பட்டு இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக இலங்கை குறித்து அலட்சியமாகயிருக்க முடியாது.
அரசியல் இனமத வன்முறைக்குள் நாடுதிரும்புவதற்கான எந்த பாதுகாப்பும் இல்லாத நிலையில் நாடு 2021க்குள் செல்கின்ற தருணத்தில் எச்சரிக்கை மணிகள் கடுமையாக ஒலிக்கின்றன.
இதன்காரணமாக எஞ்சியிருக்கின்ற -பலவீனமான –மோதல்தவிர்ப்பு அடிப்படை உரிமை பாதுகாப்பு பொறிமுறைகளை தற்போது செயல்படுத்தவேண்டும்.
பொருளாதாரம் தனது விருப்பத்துக்கு கட்டுப்பட மறுப்பதாலும்,மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தி விமர்சனத்தினால் சீற்றமடைந்துள்ளதாலும்,கட்டுப்படுத்த முடியாத அதிகாரங்கள் அரசமைப்பினால் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாகவும் ஜனாதிபதி எதிரணிக்கு எதிராக வன்முறைகளை பயன்படுத்துவது குறித்து அச்சுறுத்துகின்றார்.சட்டத்தின் ஆட்சிக்கான ஸ்தாபனங்கள் ஏற்கனவே செயல் இழக்கச்செய்யப்பட்டமையினாலும்,சுயாதீன அமைப்புகள் கண்காணிப்பு அமைப்புகள் ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதாலும் பொலிஸ்நீதித்துறை அரசியல்நோக்கத்தி;ற்காக பயன்படுத்தப்படுவதாலும் நேர்மையான பொலிஸார் எதிர்கட்சி அரசியல்வாதிகள் சிவில்சமூகத்தினர் சிறையை சந்திக்கும் ஆபத்துள்ளது.