இலங்கை மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கவென 8 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இந்த ஜனாதிபதி செயலணி முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்கவின் தலைமையில் இயங்கவுள்ளது.
இதன்படி கடந்த டிசம்பர் 31அன்று செயலணி குறித்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இச்செயலணியில் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, மருத்துவர் அமால் ஹர்ச டி சில்வா, கே.ஆர். உடுவாவல, ஜெனரல் சவேந்திர சில்வா, மருத்துவர் பிரசன்ன குணசேன,மருத்துவர் அனுருத்த பாதெனிய மற்றும் மருத்துவர் அசேல குணவர்தன ஆகியோர் அடங்குவர்.
இச்செயலணியானது பொருத்தமான தடுப்பூசியை அடையாளம் காண்பது, கொள்முதல் செயல்முறை, முன்னுரிமை மக்களைக் கண்டறிவது ஆகியவற்றில் ஈடுபட பணிக்கப்பட்டுள்ளது.