பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடைகள் அணிந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை பண்டிகைக் காலங்களில் வீதி ஒழுங்குகளை மீறி போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், போக்குவரத்து தொடர்பில் கவனிப்பதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது