கிழக்கு மாகாணத்தில் 32 பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்: மாகாண ஆளுநர்

229 0

கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 32 பாடசாலைகள் இன்று திறக்கபடாது என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.


இதன்படி காத்தான்குடி பிரதேசத்தில் 25 பாடசாலைகளும் கல்முனைப் பிரதேசத்தில் 5 பாடசாலைகளும் திருக்கோவில், அம்பாறை பிரதேசங்களில் தலா ஒரு பாடசாலையும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோருடன் ஆளுநர் நடத்திய சிறப்புக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.