ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஈழத் தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்ச்சி எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்காகத் தன் இறுதி மூச்சு வரையிலும் ஒரு கவிதைப் போராளியாகவும் களப் போராளியாகவும் பணியாற்றி வந்த அவர் கடந்த 01.12.2016 அன்று இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.