மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு “பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி” என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர்.
அன்புக்கும், நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பாராபட்சமற்ற தேசத்தினை நோக்கி என்னும் தொனிப் பொருளில் கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் நிகழ்வின் ஒரு கட்டமாக இன்று வவுனியாவில் மூன்று இனங்களையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் ஒன்று கூடி பாராபட்சமற்ற சமூகத்தை கட்டியழுப்புவோம் என உறுதியெடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற சுத்தானந்தா மண்டபத்திலிருந்து இளைஞர்கள் அமைதிப்பேரணியாக கண்டி வீதியில் அமைந்துள்ள வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். நிகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அன்புக்கும்,நட்புக்குமான வலையமைப்பின் செயலாளர் என்.பிரதீப்
பாரபட்சத்துக்கு எதிராக இன்று இளைஞர்களை ஒன்று சேர்த்திருக்கின்றோம். இலங்கையியை பொறுத்தவகையில் இன்று கருத்துசதந்திரம் உள்ள போதும் எமது பேரணியானது பல இடையூறுகளை அரச தரப்பிலிருந்து சந்தித்து வருகிறோம் என குறிப்பிட்டார். மனிதஉரிமைகள் தினத்தை அனுஸ்டிப்பதற்கு கூட எமக்கு தடையாக இருக்கிறது என குற்றஞ்சாட்டினார்.
இதேவேளை, குறித்த நிகழ்வு நாளை முதல் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.