வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் அமைதி ஊர்வலம் ஒன்று இன்று 10-12-2016 நடத்தப்பட்டது.
வவுனியா, கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த இந்த அமைதி ஊர்வலமானது பசார் வீதி வழியாக சென்று சுவர்க்கா விருந்தினர் விடுதியை அடைந்தது. அங்கு காணாமல் போனவர்களின் விடுதலைக்காகவும், அவர்களை கண்டுபிடிப்பதற்காகவும் அரசை வலியுறுத்தி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தனர்.
இந்த ஊர்வலத்தில் ஈடுபட்டவர்கள் ‘ அரசே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூறு, இறுதிப் போரில் சரணடைந்தவர்களின் உண்மை நிலை என்ன, இரகசிய முகாம்களை அம்பலப்படுத்து, தமிழ் மக்களின் அரசியல் உரிமையை ஏற்றுக் கொள்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர். இதில் காணாமல் போனவர்களின் உறவுகள் கலந்து கொண்டிருந்தனர்.