அம்பலாங்கொடை – மீட்டியாகொடை – மல்வென்ன பிரதேசத்தில் தாதியொருவாின் தங்கச் சங்கிலியொன்றை கொள்ளையிட்ட நபரொருவர் ஆற்றில் குதித்ததையடுத்து நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளார்.
இன்று காலை மல்வென்ன புகையிரதக் கடவைக்கருகில் உந்துருளியில் வருகை தந்த மேற்படி உயிாிழந்த நபர் பலப்பிட்டி வைத்தியசாலையில் பணி புாிகின்ற தாதியொருவாின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
பின்னர் பிரதேச வாசிகள் அந்நபரை துரத்திச் சென்றுகொண்டிருந்த வேளையில் இவர் அண்மையிலுள்ள ஆற்றில் குதித்ததாக தொிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் பிரதேச வாசிகளும் காவல் துறையினரும் ஒன்றிணைந்து நீாில் மூழ்கிய நபரை காப்பாற்றி ஹிக்கடுவை – ஆரச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும் அச்சந்தர்ப்பத்தில் அந்நபர் உயிாிழந்திருந்ததாக தொிவிக்கப்பபடுகின்றது.