ETI நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை தனிமைப்படுத்தலுக்கு

241 0
ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரையில விளக்கமறியலில் வைக்கப்பட்ட எதிரிசிங்க இன்வெஸ்மென்ட் (ETI) நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபையை சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் கொழும்பில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ETI நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் அதன் முன்னாள் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நேற்று (09) மதியம் கொழும்பு மேலதிக நீதவான் ருவான் நெலுத்தெனிய முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.