காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்- பொ.ஐங்கரநேசன் (காணொளி)

360 0

 

jaffna-kalanபொதுமக்கள் காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டார்.இன்று யாழ்ப்பாணம் சேவாலங்கா நிறுவனத்தில் காளான் வளர்ப்பு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுடனான கருத்தமர்வில் உரையாற்றும் போது இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

கிருமிநாசினியற்ற தாவர உணவான காளானை பொதுமக்கள் அதிகமாக நுகரவேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக்கொண்டதுடன் காளானை பொதுமக்கள் நுகர்வதன் மூலம் நஞ்சற்ற தாவர உணவை உட்கொள்வதுடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களைக் கொண்ட உற்பத்தியாளர்களுக்கான வருவாயை ஈட்டிக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

எனவே காளான் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தியை பொதுமக்கள் நுகர்வதற்கேற்ப அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதை சந்தைப்படுத்துவதற்கேற்ப நுகர்வு வலயமைப்பு ஒன்றையும் பிரதேச மட்டத்திலாவது உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டார்.

காளான் நுகர்வை பொதுமக்கள் நுகர்வதை அதிகரிப்பதற்கேற்ப வடக்கு மாகாண விவசாய திணைக்களமும் பொதுமக்களின் நுகர்வைத் தூண்டவதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.