உலக புலம்பெயர்ந்தோர் தினத்தையும், மனித உரிமை மீறல் தினத்தையும் முன்னிட்டு கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனம் ஹற்றன் நகரில் பேரணி ஒன்றையும், விழிப்புணர்வு கருத்தரங்கையும் நடத்தியது.
10.12.2016 அன்று காலை ஆரம்பமான இந்த நிகழ்வில் ஹற்றன் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து ஹற்றன்அஜந்தா மண்டபம் வரை இத் தினங்களை ஞாபகமூட்டி விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு பேரணி ஒன்று இடம்பெற்றது.
கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் நுவரெலியா பிரதேச அமைப்பாளர் பிரான்ஸிஸ் ஸ்டீபன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் செட்டிக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை லெஸ்லி பெரேரா அவர்களும், மாத்தளை மறைமாவட்ட அருட்தந்தை மார்க்கஸ் கொடிபிலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பிக்கபட்ட இப்பேரணி அஜந்தா மண்டபத்தை சென்றடைந்து அங்கு பெண்கள் உரிமை மற்றும் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பெண்களுடைய உரிமைகள் தொடர்பிலும் பெருந்தோட்ட பெண்களின் வாழ்வாதார உரிமை தொடர்பிலும் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது