சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களினால் ஏற்பாட்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது உரிமைகளை பாதுகாப்பதற்கு எவ்வாறு செயல்பட போகின்றோம் என்ற தொனிப்பொருளில் மனித உரிமை போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டது .
இதன் ஆரம்ப நிகழ்வு தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி ஊர்வலமாக மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா வரை நடைபெற்றது .
இதனை தொடர்ந்து காந்தி பூங்கா முன்றலில் மனித உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது .இந்த கண்டன போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் , மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இயுத்தத்தினால் தமது உறவுகளை இழந்த குடும்ப உறவுகள் , காணாமல் போனவர்களின் உறவுகளின் குடும்ப உறவுகள் மற்றும் சமய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தமது அடிப்படை உரிமைகளை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் எழு பரிந்துரைகளை கொண்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் மட்டக்களப்பு பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் எ .சி .எ . அசிஸ்சிடம் கையளிக்கப்பட்டது