தனியார் போக்குவரத்துச்சேவைக்கும் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களுக்கும் இடையில் மோதல் (காணொளி)

349 0

jaffna-mini-bus-attackஇன்று யாழ்ப்பாணத்தில் தனியார் போக்குவரத்துச்சேவைக்கும் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களுக்கும் இடையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் வசாவிளான் 764 வழித்தடங்கல் தனியார் பேருந்து சேவையில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் இலங்கைப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் இடையில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கோhண்டாவில் சாலைக்கு முன்பாக இருபகுதியினருக்கும் இடையில் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாலைக்கு முன்பாக இன்று காலை 8.45 மணியளவில் இலங்கை போக்குவரத்து சேவை உத்தியோகத்தர்கள் தம்மைத் தாக்கியதாக சேவையில் ஈடபட்டிருந்த தனியார் போக்குவரத்து சேவையினர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.தாக்குதல் சம்பவத்தில் சம்மந்தப்பட்டதாக கூறப்படும் வாகன சாரதி ஒருவரும் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச்சபைக்கும் 764 வழித்தடங்கல் தனியார் சேவையில் ஈடுபட்ட சாரதி மற்றும் நடத்துனருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருபகுதி நடத்துனர்களும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தங்கியுள்ளனர்.இருபகுதிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 764 தனியார் பேருந்து சேவை இன்று இடம்பெறவில்லை.