அரசாங்கம் தமிழர்களை இலங்கையர்களாக கருத மறுக்கின்றதென முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு தமிழ் அரசியல் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் என பலரும் கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்றஉறுப்பினரான மனோ கணேசனும் குறித்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து ருவிட் செய்துள்ளார்.
அவர், தனது ருவிட்டர் கண்டன பதிவில் தெரிவித்துள்ளதாவது, “யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பணியாற்றி, போரினால் மரணித்த மாணவர், ஊழியர், உறவுகளை நினைவுக்கூர்ந்து நிறுவப்பட்ட ‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை’ இடித்து தள்ளி இன்றைய இலங்கை அரசு, உயிர் வாழும் தமிழரை மட்டுமல்ல, உயிரிழந்த தமிழரையும் இலங்கையராக கருத மறுத்து நிற்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளார்.