மே 18 தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய தூபிகளும் அகற்றப்பட்டிருக்கும்

352 0

மே 18 தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய தூபிகளையும் அகற்றியிருப்பார்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா விளக்கம் அளித்துள்ளார்.

நேற்றிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் நினைவாலயம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இடித்து அழிக்கப்பட்ட நிலைமை தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் இடம் வினவியபோது

யாழ் பல்கலைக் கழகம் என்பது  அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்றி நிரூபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை
எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்ட தன் அடிப்படையிலேயே அதனை அகற்றியிருந்தேன்  குறித்த விடயம் தொடர்பில் குறித்த அனுமதி இல்லாது அமைக்கப்பட்ட தூபியை அகற்றுகிறேன் இந்த விடயம் தொடர்பில் வேறு தலையீடு செய்யவேண்டாம் என்ற  வேண்டுகோளின் அடிப்படையிலேயே நான் இதனை செய்திருந்தேன்

அனுமதி பெறப்படாத அமைக்கப்பட்ட குறித்த தூபியினை அகற்ற தவறி இருந்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்படும் ஏனைய பொங்குதமிழ் தூபி மற்றும் மாவீரர் நினைவாலயம் என்பன நிர்மூலமாக்கப் பட்டிருக்கும் எனவே இதனை தடுக்கும் முகமாகவே நான் எமது நிர்வாகத்தினரின் உதவியுடன் நேற்றிரவு அனுமதி இல்லாது அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் தூபியினை அகற்றியிருந்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.