அச்சுவேலியில் 5வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

305 0

downloadயாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புத்தூர் சுன்னாகம் வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தகம் ஒன்றில் குறித்த இளைஞர்கள் தங்கியிருந்த போது இன்று அதிகாலை அச்சுவேலி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

119 பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அச்சுவேலிப் பொலிசார் இன்று அதிகாலை குறித்த இளைஞர்கள் இருந்த இடத்திற்குச் சென்று வாள்களைக் கைப்பற்றியுள்ளனர்.

119 பொலிசாருக்கு இரண்டு விதமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.முதலாவது தகவலில் கஞ்சா இருப்பதாகவும், இரண்டாவது தகவலில் வாள்களுடன் இளைஞர்கள் இருப்பதாகவும் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று நவீனரக புதிய வாள்கள் உறையுடன் கைப்பற்றியுள்ளதாக அறிய முடிகின்றது.கைது செய்யப்பட்டவர்கள் இதுவரை நீதவான் முன்னிலையிலும் ஆஜர்ப்படுத்தப்படவில்லை.