புகையிரத சேவை தொழிற்சங்கங்களுடனான பேச்சுக்கு தயார்

289 0

40483381nimalபுகையிரத திணைக்களத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இணக்கம் தெரிவித்திருப்பதாக புகையிரத சேவை தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணி கூறியுள்ளது.
தமது பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர் மறுப்புத் தெரிவித்து வந்தது தொடர்பில் ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டப்பட்டதாக அதன் செயலாளர் சம்பத் ராஜித கூறினார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 15ம் திகதி இடம்பெற உள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது புகையிரத சேவை தொழிற்சங்கங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தி நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.