டிஜிடல் விளம்பர பலவை ஒன்றை நிறுவுவதற்கு தேவையான அனுமதியை வழங்க ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் கண்டி நகர சபை உறுப்பினர்கள் இருவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதிபதிகள் பிணை கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
அதனடிப்படையில் குறித்த இருவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்து அன்றைய தினம் பிணை கோரிக்கை தொடர்பில் விசாரணை செய்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கண்டி நகர சபை உறுப்பினர்களான கீர்த்தி பண்டார ரத்னாயக்க மற்றும் எம்.பீ விக்னேஷ்வரம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.