முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் தொழில் நிலையம் ஒன்றின் செயற்பாட்டிற்கு சில முச்சக்கர வண்டி சாரதிகள் இடையூறு செய்ததாக மாங்குளம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த(07) ம் திகதி செய்யப்பட்ட குறித்த முறைப்பாட்டையடுத்து உடனடியாக முச்சக்கர வண்டிகளின் தரிப்பிடத்தை மாற்றுமாறு மாங்குளம் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பாக குறித்த சாரதிகள் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரனிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, பொலிஸாருடன் மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்து குறித்த வாகன தரிப்பிடம் மீளவும் சாரதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.