மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பாளர்கள் அனைவரும் கடுமையாக குழப்பமடைந்துள்ளனர்

471 0

625-500-560-350-160-300-053-800-900-160-90-15புதிய அரசியலமைப்பு குறித்து விழிப்புணர்வூட்டுவதற்காக மீரிஹான பிரதேச ஹோட்டல் ஒன்றில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆசனம் வழங்கப்பட்டது. இந்த கலந்துரையாடலுக்காக வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரவு 7.30 மணியளவில் ஆசனம் பெற்றுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே நீண்ட நாள் வைத்திருந்த திட்டத்திற்கமைய, அந்த ஹோட்டலின் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துள்ளார்.

இதனால் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பாளர்கள் அனைவரும் கடுமையாக குழப்பமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் “ஹெப்பி பெர்த் டே டூ யூ ஜொனி” என பாடியவுடன் மின் விளக்குகள் மீண்டும் ஒளிர செய்ததுடன் சபைக்கு மத்தியில் பெரிய அளவிலான கேக் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எழுந்திருந்து கேக்கை வெட்டி மஹிந்த ராஜபக்சவுக்கு முதல் பகுதியை ஊட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.