இலங்கையில் இணையத்தள பாவணையாளர்கள் 30 சதவீதமாகும்.
இதனை அதிகரிக்க வேண்டியுள்ளது.
மேலும் உலகில் இணையத்தள வேக தரவரிசையில் சீனா, இந்தியாவை விடவும் முன்னிலை வகித்து 62வது இடத்தில் உள்ளோம் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வரவுசெலவு திட்டத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அமைச்சின் செலவின தலைப்பிலான விவாதத்தின் போதே அவர் இந்த தகவலை தெரிவித்தார்.