யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பதில் நீதவான் சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை மீண்டும் நீடித்தார்.
அதற்கமைய சந்தேகநபர்கள் 12 பேரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த வருடம் மே மாதம் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.