ஜெவின் மரணம் இலங்கைக்கு சாதகம் – ஜாதிக ஹெல உறுமய

358 0

jathika-hela-urumaya_0தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், அவரின் உயிரிழப்பு இலங்கைக்கு சாதகமான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக பல பெண் அரசியல் வாதிகள் செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போது அவர்கள் அரசியலில் இருந்து விலகிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இலங்கைக்கு தற்போது நல்ல காலம் பிறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவால் இலங்கைக்கு இருந்த மற்றும் ஒரு தலைவலி நீங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.