நாட்டை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும்-அஜித் நிவாட் கப்ரால்

224 0

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் அதே வேளையில் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகித்து நாட்டை முன்னோக்கி இட்டுச்செல்ல வேண்டும் என்று நிதி மற்றும் முதலீட்டு வர்த்தக அரச தொழில்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் S.M மரிக்கார் நிலையியல் கட்டளை 25/2 2020 – 2024 ஆண்டுகளுக்கு செலுத்தப்பட வேண்டிய கடன்தொகை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.

நாட்டை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் அதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். கடந்த சில வருடங்களில் ரூபாவின் மதிப்பை சரியான முறையில் முன்னெடுக்காமையினால் இந்த வருடத்தில் கூடுதலான கடன்தொகையை செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சமகால அரசாங்கம் அரச நிர்வாகத்தை பொறுப்பேற்கும் போது ரூபாவின் மதிப்பை உரிய வகையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

2020ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் ரூபாவின் மதிப்பு ஓரளவு பாதிப்புக்குள்ளானது. இருப்பினும், இறுதி சில தினங்களில் மீண்டும் ஸ்திரநிலையை அடைந்ததாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் சில மாதங்களில் ரூபாவின் மதிப்பு மற்றும் வட்டி வீதத்தை பாதுகாத்து சில மாதங்கள் திருப்பி செலுத்தப்பட வேண்டிய கடன்தொகை எந்தவித தள்ளுப்படியும் இன்றி செலுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.