வருட இறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்று (06) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.
வழக்கு விசாரணைகளில் அத்தியாவசியமான ஆட்களையும் அதிகாரிகளையும் மாத்திரம் கலந்துகொள்ள இடமளித்து விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
கொழும்பு பிரதான மஜிஸ்ரேட், மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொடர்பான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விசாரணை நடைமுறைகள் முன்னெடுக்கப்படும்.
கொவிட் தொற்று குறைவடைந்து, நீதிமன்ற செயற்பாடுகளை வழமையான முறையில் முன்னெடுப்பது பற்றி சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை கிடைக்கும் வரையில், தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி சந்தேக நபர்களைக் கண்காணிப்பதற்கும், அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.