ஆயுர்வேத வைத்தியசாலைகளை தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலையை கேந்திரமாக கொண்டு அதன் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய மேம்பாடு மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
இதற்காக தாம் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள அவர், இதற்காக சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய பிரிவுகளின் உதவியினை பெற்று வேறுபட்ட முறைக்கு சிகிச்சை அளிக்கை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவம் தெரிவித்துள்ளார்.